தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அ.மு.மு.க.,பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ' இந்த எடப்பாடி ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்போது காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.ஆனால் இந்த தண்ணீர் கடைமடை விவசாயிகளுக்கு செல்லும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை அரசு மேற்கொள்ளவில்லை.
இனி வரும் காலங்களில் அமமுக யானை பலம் பெறும்:டி.டி.வி.தினகரன் கருத்து! - press meet
தஞ்சாவூர்: இனிவரும் தேர்தல்களில் அமமுக யானை பலத்துடன் வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளங்களை பாழாக்கும் திட்டங்களைதான் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.இனி வரும் காலங்களில் இந்த ஆட்சி நடத்தியவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும். விவசாயிகள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடிவருகின்றனர்.எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டங்களை விளைநிலங்களில் செயல்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.
பின்னர் அமமுவில் இருந்த பலரும் வெளியேறி வேறு கட்சிகளில் இணைகிறார்களே ? என்ற பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , 'தொண்டர்கள் யாரும் அமமுக வைவிட்டுப்போகவில்லை சிலர் தங்களது சுயநலத்திற்காக சென்றுவிட்டனர். இனிவரும் தேர்தலில் யானை பலத்துடன் அமமுக வெற்றிபெரும்' என்று தெரிவித்தார்.