தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பண்ணவயல் பாஸ்கரின் இல்லத் திருமண விழாவில் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதற்குப் பின், கடைமடைப் பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை.
"ஆறுமுகசாமி ஆணையம் என்பது ஒரு அரசியல் நாடகம்" - ஓபிஎஸ்ஸை வம்பிழுத்த டிடிவி தினகரன்!
தஞ்சை: ஓ.பன்னீர்செல்வத்தை திருப்திப்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டி டி வி தினகரன்
இதனால், பயிர்கள் எல்லாம் கருகி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. இனிமேலும் இது போல் நடைபெறாமல் இருக்க அரசு நீர் மேலாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.
ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்தை திருப்திபடுத்துவதற்காக அமைக்கப்பட்டதாகும். அம்மாவின் இறப்பில் எந்த மர்மமும் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ஆறுமுகசாமி ஆணையம் என்பது அரசியல் ஒரு நாடகம். இருந்தாலும், ஆணையம் என்ற பெயரில் அரசு பணம் தான் விரயமாகிக் கொண்டிருக்கிறது' என்று கூறினார்.