தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநங்கைகள், தமிழக அளவில் அரசு வழங்கும் சிறந்த திருநங்கை விருது 2020க்கு விண்ணப்பிக்க அரசாணை கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், திருநங்கைகள் விருதுக்கு விண்ணப்பிக்க அரசு உதவி இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். தன்னைச் சார்ந்த ஐந்து திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேறி இருக்க உதவி செய்திருக்க வேண்டும். திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது போன்ற விதிகள், இந்த விருதுக்கு வகுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.
தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஆட்சியர் வெளியிட்ட திருநங்கை விருது அறிவிப்பு குறித்த பத்திரிக்கைச் செய்தியில், திருநங்கை என்பது அடிக்கப்பட்டு மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சமூக நல அலுவலர்கள், ஆட்சியர் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.