தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து விதி மீறல்; 60,000 வழக்குகள் பதிவு! - thanjavur

தஞ்சாவூர்: போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்துள்ளார்.

டிஐஜி லோகநாதன்

By

Published : Aug 21, 2019, 7:08 AM IST

தஞ்சாவூரில் உள்ள அரண்மனை வளாகத்தில் 4ஆவது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சாலை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கலந்து கொண்டனர். பின்னர், காவல்துறையினர் சார்பில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து விதி மீறல் - 60 ஆயிரம் வழக்கு பதிவு...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி லோகநாதன், ' தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வுகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 விழுக்காடு சாலை விபத்துகளை குறைத்து வந்துள்ளோம். அதுமட்டுமின்றி விதிகளை மீறி பயணித்தவர்களின் சுமார் 60,000 வழக்குகள் இந்த ஆண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details