தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி இன்று (செப். 18) ஒரேநாளில் மாவட்டத்தில் 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் மேலும் 162 பேருக்கு கரோனா பாதிப்பு! - கோவிட்- 19
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப். 18) ஒரேநாளில் 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
![தஞ்சையில் மேலும் 162 பேருக்கு கரோனா பாதிப்பு! தஞ்சை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:50:20:1600438820-tn-tnj-03-corona-positive-vis-script-7204324-18092020193648-1809f-02897-56.jpg)
தஞ்சை
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,063 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7,892 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 1,031 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதேபோல் 140 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.