திருவையாறு அருகே கடுவெளி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தற்போது மருவூர் போலீசாருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கு பணிகளையும், ரேஷன் கடைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் .
தற்போது கரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களையும் காவலர் பணியில் தன்னார்வலர்களான பணி செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அனுமதியுடன் மருவூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன், காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் திருவையாறு கடுவெளி போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நடங்ததுனர்கள் 10 பேரை மருவூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போக்குவரத்து சரி செய்யும் பணியிலும் ,ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.