தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபானம் வாங்கி விட்டு கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள்: வைரலான சிசிடிவி காட்சிகள் - rowdy

தஞ்சாவூர் : கும்பகோணத்தில் மதுபானம் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஊழியர்களை, ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டும் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மதுக்கடையில் பாட்டீலை வாங்கி விட்டு பட்டா கத்தியைக் காட்டிய ரவுடி!

By

Published : Aug 6, 2019, 2:32 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்- தஞ்சை சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த இருவர் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு பீர் உள்ளிட்ட மது பானங்களை வாங்கினர்.

இருவரும் வாங்கிய மதுபானங்களுக்கு டாஸ்மாக் ஊழிர்யர்கள் பணம் கேட்டதற்கு, அவர்கள் பணம் கொடுக்காமல் பட்டா கத்தியைக் காட்டி மிரட்டினர். இதில் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி மிரட்டும் குடிமகன்கள்

இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் காட்சி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது இந்த காணொலி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details