தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கிய ஜோயல் (18), அப்சல் (18), பழமானேரியைச் சேர்ந்த சபிக் அப்துல் ரஹ்மான் (19) ஆகிய இவர்கள் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை வல்லம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.
லாரி மீது பைக் மோதி இரு கல்லூரி மாணவர்கள் பலி - tn_tnj_02_road_accident_clg_boys_7204324
தஞ்சாவூர்: செங்கிப்பட்டி அருகே பார்சல் லாரியின் பின்னால் பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இவர்கள் மூவரும் கல்லூரி முடிந்த பிறகு வழக்கம் போல ஓரே பைக்கில் வீட்டுக்குப் புறப்பட்டனர். இவர்களில் ஆரோக்கிய ஜோயல் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்ற இருவரும் பின்புறம் அமர்ந்து சென்றனர். செங்கிப்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால், முன்னாள் சென்ற பார்சல் லாரி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆரோக்கிய ஜோயல், அப்சல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சபீக் அப்துல் ரஹ்மான் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TAGGED:
news_tnj