தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் பிரபு. இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தன் மனைவியுடன் வசித்து வந்தார்.
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்! - முதல் நிலை காவலர்
தஞ்சாவூர்: தஞ்சை அருகே முதல்நிலை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி இலக்கியா பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார் என்றும் தாங்கள் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில்தான் அவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.