தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை ஆய்வுசெய்த டிஜிபி சைலேந்திர பாபு - தஞ்சை சரக டிஐஜி லோகநாதன்

தஞ்சாவூர்: பெருவுடையார் கோயிலில் வருகிற பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள நிலையில் டிஜிபி சைலேந்திரா பாபு ஆய்வுமேற்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை ஆய்வு செய்தார்-டிஜிபி சைலேந்திர பாபு
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை ஆய்வு செய்தார்-டிஜிபி சைலேந்திர பாபு

By

Published : Jan 30, 2020, 1:41 PM IST

தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்காக வரும் ஒன்றாம் தேதியிலிருந்து யாகசாலை, வேள்வி வழிபாடுகள் மூலம் புனிதநீரை சிவாச்சாரியார் பூஜிக்க உள்ளனர்.


இந்த நிலையில் யாக சாலை பகுதியில் ஆய்வுசெய்வதற்காக ரயில்வே மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு டிஜிபி சைலேந்திரபாபு, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.

23 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அதாவது 1997இல் நடத்தப்பட்ட குடமுழுக்கு விழாவில் யாக சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் உடல் கருகி பலியாகினர், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை ஆய்வுசெய்தார்- டிஜிபி சைலேந்திர பாபு


அவ்வாறாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமலிருக்க ஆய்வினை மேற்கொண்டதாகவும், மேலும் இந்த ஆய்வின்போது காவல் துறை அலுவலர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியும் மீட்புப்பணிகளுக்குப் பயன்படுத்தும் ஏராளமான உபகரணங்களைப் பார்வையிட்டும் அதனைசெயல்படுத்தியும் ஆய்வினைமேற்கொண்டார்.

இதையும் படிங்க:தலைமுறை காக்க தலை கவசம் அணிவோம்' - விழிப்புணர்வு பேரணி

ABOUT THE AUTHOR

...view details