தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்தியப் பாதுகாப்புப் படையினர் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு...!

தஞ்சாவூர்: தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்தியப் பாதுகாப்புப் படையினர் 650 பேர் தஞ்சாவூரின் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுப்பு நடத்தினர். .

முக்கிய வீதிகளில் அணிவகுப்பு

By

Published : Apr 15, 2019, 3:55 PM IST

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் 18ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிக்காக முதல் கட்டமாக ஒடிசாவில் இருந்து பாதுகாப்புப் படையினர் தஞ்சாவூருக்கு வந்துள்ளனர்.

வாக்காளர்கள் பாதுகாப்பாக 100 விழுக்காடு அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்புப் படையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் தேர்தல் அலுவலர் சுரேஷ் தலைமையில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் இருந்து மேலவீதி, வடக்குவீதி போன்ற முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details