தஞ்சாவூர்:கும்பகோணம் 8வது பட்டாலியன் என்.சி.சி(NCC) அலுவலகத்தில் மாநில அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவானது நேற்று (செப். 25) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக அரங்கில் நடந்த பாராட்டு விழாவில், துப்பாக்கி சுடுதல் போட்டியில், சாதனை படைத்த மாணவர், மாணவியர்கள், சிறந்த அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி என்.சி.சி யின் தமிழக மாநில தலைமை அதிகாரி கமோடர் அதுல்குமார் ரஸ்தோகி கௌரவித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அகில இந்திய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்ற, கும்பகோணம் அன்னை கல்லூரியின் இந்துஜா, சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்லூரியின் வித்யாஸ்ரீ மற்றும் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியின் சிவா ஆகியோரை பாராட்டி சான்றிதழ் அளித்தார்.