தஞ்சாவூர்: தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் சென்னை காவிரி மருத்துவமனையிலிருந்து அவரது சொந்த ஊரான பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ராஜகிரி பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சரின் வீட்டிற்கு அருகேயுள்ள திடலில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை! - minister duraikannu death news
உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு அமைச்சர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வளர்மதி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் துரைக்கண்ணுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்துவந்த பாதை