தஞ்சாவூர்: மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த ரயில், இன்று தஞ்சாவூருக்கு முன்பு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திட்டை ரயில் நிலையத்தில் இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.
இன்ஜின் பழுதால் மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயில் தாமதம்! - titte
இன்ஜின் பழுது காரணமாக திருச்சிராப்பள்ளி விரைவு ரயில், மாற்று இன்ஜின் பொறுத்தப்பட்டதை அடுத்து, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
இன்ஜின் பழுதால் 1 மணி நேரம் தாமதமான திருச்சிராப்பள்ளி விரைவு ரயில்!
பின்னர் தஞ்சாவூரில் இருந்து மாற்று ரயில் இன்ஜின் கொண்டு வரப்பட்டு, பெட்டியில் பழுதான இஞ்சினுடன் இணைக்கப்பட்டது. இதனால் காலை 9.18 மணிக்கு திட்டை வந்து புறப்பட வேண்டிய ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:சென்னை மெட்ரோ பணிகள்; புரதானச் சின்னங்கள் பாதிக்காது - தமிழக அரசு பதில்