தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருவிடைமருதூர் உட்கோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்றிரவு(அக்.06) அம்மா சத்திரம் பகுதியில் உள்ள நமச்சிவாய நகரில் செல்வகுமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்குச்சொந்தமான இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பதுக்கி வைத்திருந்த மூன்று டன் புகையிலை பறிமுதல் - இருவர் கைது
கும்பகோணம் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மூன்று டன் புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த செல்வகுமார் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரை திருவிடைமருதூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
பதுக்கி வைத்திருந்த மூன்று டன் புகையிலை பறிமுதல்
அதில் சுமார் மூன்று டன் அளவிலான விற்பனைக்காக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்டவிரோதமாக, பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரையும், கைது செய்து, திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது