தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள காங்கேயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ( 22), திருபுவனம் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (22), தஞ்சாவூர் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட கவிதா (40) ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர் குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட மூவருக்கு சிறை! - குண்டர் சட்டம்
தஞ்சாவூர்: தொடர் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டுவந்த பெண் உள்பட மூவரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Kundas act
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ் முக் சேகர், தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் கார்த்திக் ,சதாம் உசேன் ,கவிதா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.