தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த தாய் உள்பட மூவர் கைது! - குழந்தை திருமணம் செய்து வைத்த மூவர் கைது

தஞ்சாவூர்: பூதலூரில் பள்ளி சிறுமியை உறவினருக்கு திருமணம் செய்து வைத்த தாய் உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

By

Published : Jan 29, 2021, 1:31 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (43 ). இவரது மனைவி விமலா (35). இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். அவர், அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், விமலா, அவரது மகளை காணவில்லை என பூதலூர் காவல் நிலையத்தில் கலைவாணன் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விமலா தனது உறவினரான தனலட்சுமி என்பவரது மகன் ரோஹித் (21) என்பவருக்கு திருச்சி தில்லைநகரில் திருமணம் செய்து வைத்துள்ளதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இத்திற்கு விரைந்து சென்ற பூதலூர் காவல் துறையினர் அங்கு சிறுமிக்கு திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், தனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் மகளுக்குத் திருமணம் செய்ய வழி இல்லை என்பதால் அவரது உறவினருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளதாக விமலா தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், சிறுமிக்கு திருமணம் செய்துவைத்தது குற்றம் எனக் கூறி உடனடியாக விமலா, ரோஹித், அவரது தாய் தனலட்சுமி ஆகிய மூன்று பேரையும் பூதலூர் காவல் துறையினர் கைது செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமிக்கு வயது 15 தான் என்பதால் அவரை தஞ்சாவூர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பூப்பறித்துக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details