பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட மன்னப்பன் குளத்தெருவில் வசிப்பவர் கோபு. இவர் அதே பகுதியில் மூன்று வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீடுகளில் மரியா (70) பாப்பாத்தி (75) மோகன் (55) ஆகியோர், தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இவர்களது வீடுகளில் தீப்பிடித்தது. தூங்கிக்கொண்டிருந்த மூவரும் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற முயற்சி செய்தனர். இருந்தும் வேகமாக பரவிய தீயில் சிக்கி மூவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.