தஞ்சாவூரில் பொது முடக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி, தடையை மீறி கள் இறக்கி விற்பனை செய்வதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிறப்பு காவல் ஆய்வாளர் பிரகாசம், காவலர்கள் உமா சங்கர், இளையராஜா, சிவக்குமார், அழகுசுந்தரம், அருண் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சை தாலுகா காவல்நிலையத்திற்குட்பட்ட மாரியம்மன் கோயில், கீழவஸ்தாசாவடி, நெடார், வயலூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ராஜேந்திரம் தோப்பு பகுதியில் தென்னங் கள் இறக்கியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, குடம் குடமாக வைக்கப்பட்டிருந்த கள்ளை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், காமராஜ் (55) செவத்தியார் (55), துரைராஜ் (55), ஆகியோரை கைது செய்தனர்.