தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 1, 2020, 1:49 AM IST

ETV Bharat / state

'கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்'

தஞ்சாவூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வல்லம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரியக் கட்டடத்தில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டுவருகிறது.

கரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள தயக்கமுள்ளவர்கள், தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

அவ்வாறு விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒப்புதல் பெற்றபின், அவ்வீட்டினைத் தொடர்புடைய வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவர் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து, தனிமைப்படுத்திக் கொள்ள தனிக் கழிவறையுடன் கூடிய தனியறை உள்ளதை உறுதிசெய்து மாவட்டக் குழுவிற்கு அறிக்கை சமர்பிப்பார்கள்.

அதனடிப்படையில் அருகில் வசிப்பவர்களுக்கு ஆட்சேபனை இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். அனுமதி பெறுபவர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details