கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்களை மூட உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மதுபான கடைகளும், பார்களும் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.
144 தடையை மீறி விற்பனைசெய்த மதுபாட்டில்கள் பறிமுதல் - தஞ்சாவூர் மது பாட்டில்கள் பறிமுதல்
தஞ்சாவூர்: நாடு முழுவதும் 144 உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தடையை மீறி விற்பனைசெய்த இரண்டாயிரம் மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

Thnajavur Liquor Recovery
இந்நிலையில், தஞ்சையில் சாந்தபிள்ளை கேட் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் சோதனைசெய்தனர். அதில் இரண்டாயிரம் மதுபாட்டில்கள், 52 ஆயிரம் ரூபாய் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டது.
பறிமுதல்செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
இதையும் படிங்க:காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்