தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கிய முதல் நாளிலேயே ரயில் சேவை ரத்து - பயணிகள் அதிருப்தி - railway gate keeper

தஞ்சை: காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி-திருவாரூர் இடையே புதிய ரயில்வே போக்குவரத்து

By

Published : Jun 2, 2019, 10:33 AM IST

Updated : Jun 2, 2019, 2:39 PM IST

திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றுவந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, பத்து ஆண்டுகளுக்கு பின் புதிய ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. திருவாரூரில் இந்த ரயில் சேவையை நாகை எம்.பி. செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாங்குடி, ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்கிறது. அதன்படி காலை 8.15 மணிக்கு திருவாரூரில் புறப்படும் இந்த ரயில் மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும். மீண்டும் காரைக்குடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

காரைக்குடி-திருவாரூர் இடையே புதிய ரயில்வே போக்குவரத்து

இந்நிலையில் நேற்று முதல் சேவை காலை 8.15 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கியது. சுமார் 160 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 70-க்கும் மேற்பட்ட ரயில்வே கேட்டுகள் உள்ளன.

இவற்றில் 70 கேட்டுகளில் கேட் கீப்பர் பணியாளர்கள் இல்லாமல் உள்ளன. இதனால் ரயில் ஒவ்வொரு முறை கேட்டுகளை அடையும் போது ரயிலில் சென்ற ஊழியர்கள் ஏறி இறங்கி கேட்டை அடைப்பதும், திறப்பதுமாக இருந்தனர். இதன்காரணமாக ரயில் சுமார் மூன்று மணிநேரம் தாமதமாக காரைக்குடி சென்றடைந்தது.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அது மட்டுமல்லாமல் தாமதமாக ரயில் வந்ததால் மீண்டும் திருவாரூர் செல்லும் சேவை தற்காலிமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. பத்து ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட்ட ரயில் சேவை முதல் நாளிலேயே ரத்து செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Last Updated : Jun 2, 2019, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details