தஞ்சாவூர்மாவட்டம், திருவையாற்றில் ஆண்டுதோறும் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 175ஆவது ஆராதனை விழா மங்கள இசையுடன் தொடங்கி நடைபெற்றது.
ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, இந்த விழா ஒரே ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. இந்தவிழாவை தியாகப்பிரம்ம சபை தலைவர் ஜி.கே. வாசன் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த பகுள பஞ்சமி நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை தியாகராஜர் வாழ்ந்த இல்லமான திருவையாறு திருமஞ்சன வீதியிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகப் புறப்பட்டு, பஜனை பாடி அவரது சமாதிக்கு வந்தடைந்தனர்.