தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவையாறில் நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை! - Thiruvaiyaru Pancharatanai Kirthi

தஞ்சை: திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 174ஆவது ஆராதனை விழா இன்று பஞ்சரத்தின கீர்த்தனையுடன் நடைபெற்றது.

பஞ்சரத்தின கீர்த்தனை
பஞ்சரத்தின கீர்த்தனை

By

Published : Feb 2, 2021, 10:37 AM IST

திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 174ஆவது ஆராதனை விழா நேற்று மாலை (பிப். 01) 4.30 மங்கள் இசையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 5 மணிக்கு 174ஆவது ஆராதனை தொடக்க விழா நடைபெற்றது.

தொடர்ந்து இன்று (பிப். 02) காலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. விழா பந்தலில் 8.30 மணி முதல் 9.00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 9 மணிக்கு அனைத்து இசைக் கலைஞர்களும் ஒன்றுசேர்ந்து பஞ்சரத்தினை கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செய்தனர்.

திருவையாறில் நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை

அப்போது தியாகராஜர் சிலைக்கு மகா திருமுழுக்கு நடந்தது. அதைத் தொடர்ந்து 10 மணிமுதல் 11 மணிவரை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாலை 5 மணி முதல் 8 மணிவரை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

முன்னதாக இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: பட்டயக் கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்!

ABOUT THE AUTHOR

...view details