திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை ராஜேந்திரம் மேலப்பேட்டை தெருவில் ஜனமுத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அதே ஊரை சேர்ந்த கணபதி குருக்கள் பூஜை செய்துவருகிறார். நேற்று பூஜைகளை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டு காலை பூஜைக்கு வந்தபோது கோயிலின் பரிவார தெய்வங்கள் கோபுரத்தில் இருந்த 6 செம்பு கலசங்கள் திருடுபோயிருந்தன. இதன் மதிப்பு சுமார் 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.
திருவையாறு அருகே கோயில் கலசங்கள் திருட்டு! - திருவையாறு அருகே திருட்டு
தஞ்சாவூர்: திருவையாறு அருகே ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 6 கோயில் கலசங்கள் திருடுபோனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Thiruvaiyaru near Kovil kalasam theft
இது தொடர்பாக நடுக்காவேரி காவல்நிலையத்தில் தஞ்சை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் கவியரசு புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சாதித்துக்காட்டிய இந்திய வம்சாவளி!