தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவையாறு நில அபகரிப்பு வழக்கு : சசிகலாவின் சகோதரர் ஆஜராக நீதிபதி உத்தரவு - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் : திருவையாறு நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் உள்ளிட்டோர் வருகிற டிசம்பர் எட்டாம் தேதியன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சசிகலாவின் சகோதரர் ஆஜராக நீதிபதி உத்தரவு
சசிகலாவின் சகோதரர் ஆஜராக நீதிபதி உத்தரவு

By

Published : Oct 29, 2020, 6:11 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மனோகரன்-வளர்மதி தம்பதி. இவர்கள் அம்மன்பேட்டை அருகேயுள்ள ஆற்காடு கிராமத்தில் 4.84 ஏக்கர் பரப்பளவில் நிலம் வாங்கி அதில் பண்ணைத் தோட்டம் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது இடத்தை, சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் மிரட்டி வாங்கியதாக மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இத்தம்பதியினர் முன்னதாக புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சுந்தரவதனம் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவையாறு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று (அக்.29) நீதிமன்றத்தில் முருகராஜ், தஞ்சை மாவட்ட மாநகர அமமுக செயலர் ராஜேஸ்வரன், மதியழகன், முருகன், சங்கர், ஜெஸ்டின் ஆப்ரஹாம், சிவசங்கர் ஆகியோர் ஆஜராகினர்.

இதில், சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம், மோகன்குமார், ராஜசேகர், தர்மலிங்கம் ஆகிய நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், நீதிபதி மணிகண்டன் வருகிற டிசம்பர் எட்டாம் தேதி அன்று விசாரணைக்கு சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details