தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமான் சர்ச்சை பேச்சுக்கு திருமுருகன் காந்தியின் மழுப்பலான பதில்! - 7பேர் விடுதலை

தஞ்சாவூர்: ராஜீவ் படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானின் கருத்துக்கு திருமுருகன் காந்தி மழுப்பலான பதில் அளித்துள்ளார்.

seeman

By

Published : Oct 20, 2019, 12:40 PM IST

கும்பகோணத்தில் பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் 'திருவள்ளுவர் 2050 ஆண்டு அடைவுகள்' குறித்த நூல் அறிமுக விழா, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனர் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரீஃப் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திருமுருகன் காந்தி, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலையை தமிழக ஆளுநர் தடுத்து வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தற்போதைய சூழலில் 7 பேரின் விடுதலை மற்றும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் ஆகியவை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக உள்ளது" என கூறினார்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

ராஜீவ் படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு திருமுருகன் காந்தி , அதற்கு பதில் அளிக்காமல் வேறு ஒரு பதிலை மழுப்பலாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஈழத்தமிழர்களைப் பற்றியோ ராஜிவ் காந்தியைப் பற்றியோ பேச கனிமொழிக்குத் தகுதியில்லை...!'

ABOUT THE AUTHOR

...view details