தஞ்சாவூர் கும்பக்கோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் -தொல்.திருமாவளவன் அதில், ‘தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாமக வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தாழ்த்தப்பட்ட மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இதில் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பொன்பரப்பியில் இந்து முன்னணி முன்னணியில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. இரண்டாயிரம் வாக்குகள் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால் கள்ள ஓட்டு போட்டது வாக்குச்சாவடி கைப்பற்றியது காரணமாக இருக்கலாம் என்று இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் இதுகுறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்’ என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.