தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கோடீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா! - கும்பகோண கோயில் திருவிழா

தஞ்சை: கும்பகோணத்தை அடுத்த திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயில்

By

Published : Apr 10, 2019, 11:52 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற, பழமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீஸ்வரர் கோயில் உள்ளது.

இன்று சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி நடந்தது. கோயிலின் பிரதான கொடிமரத்திற்கு மஞ்சள் சந்தனம் பால் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது தொடர்ந்து நந்தியம் பெருமான் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க தேவார திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க திருக்கொடியேற்றம் நடந்தது.

வரும் 14ம் தேதி ஓலைச் சப்பரம் புறப்பாடும், 16ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து வரும் 18ம் தேதி தேரோட்டமும் , 19ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா வால் ஊரே திருவிழாக் கோலம் கொண்டுள்ளது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயில்

ABOUT THE AUTHOR

...view details