தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் பயிற்சி!

Thanjavur Govt School: தஞ்சாவூரில் பார்வைத் திறன் குறையுடைய பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை ஒலிபெருக்கி மூலம் அரசு சிறப்பு பள்ளி அளிக்கிறது அது குறித்து விரிவாக பார்க்கலாம்..

தஞ்சாவூரில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் பயிற்சி
தஞ்சாவூரில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் பயிற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 4:28 PM IST

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:திருக்குறள் உலகப் பொதுமறை நூலாக போற்றப்படுகிறது. இதனை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், புது முயற்சியாக தஞ்சாவூரில் இயங்கி வரும் பார்வைத் திறன் குறையுடைவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் கற்றுத் தரப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், மேம்பாலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதி நேரம் மற்றும் முழுவதும் என பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவியர்கள் என இப்பள்ளியில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை சுமார் 150 க்கு மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இவர்கள், சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பிரெய்லி எழுத்து கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறளை கற்றுத் தரும் வகையில், புது முயற்சியாக, ஒலிபெருக்கி வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் ஆகியவை தானியங்கி கருவியின் மூலம் தினமும் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், அந்த திருக்குறளை உற்று நோக்கும் வகையில், முன்னதாக ஒரு மணி நேரம் முடிவடைந்ததும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அலாரம் அடிக்கப்பட்டு பின்னர் திருக்குறள் ஒலிபெருக்கி மூலம் கூறப்படுகிறது.

இதன் மூலம் பார்வை திறன் குறையுடைய மாணவர்கள் அந்த அலாரத்தை கவனித்து, பின்னர் திருக்குறளை மனதில் உள்வாங்கி அவற்றை கற்றுக் கொள்கின்றனர். இதனால் மாணவ, மாணவியர்கள் திருக்குறளை கற்று கொண்டு பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்கேயே விடுதியில் தங்கி கல்வி பெற்று வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் படிக்கும் 10 முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் கற்றுத் தரும் வசதியினை, இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தமிழகத்தில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு சென்னை (பூந்தமல்லி), திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே இந்த சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. தஞ்சையில் மட்டும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் படிக்கும் வசதி உள்ளது. மேலும், இப்பள்ளியில் சிறப்பு அம்சமாக கணிணி பயன்பாடு பாடப்பிரிவானது, கணிணி வாய்ஸ் மூலம் கற்றுத் தரப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி கூறுகையில்,“பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் கடிகாரத்தை நேரில் பார்க்க முடியாததால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலாரம் அடித்து, பின்னர் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு அதன் பொருளும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் திருக்குறளை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது” என்று கூறுகிறார்.

இதையும் படிங்க:"தமிழக அரசின் மீதான அவநம்பிக்கையை மறைக்க எடுத்துள்ள அஸ்திரம்.. ஆளுநர் எதிர்ப்பு" - அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details