தஞ்சாவூர்:திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (ஜன 29) விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 680 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, உறுதிமொழியை ஏற்று, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைத்தார். போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு மேலும், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திய வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றிபெற்ற காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், அண்டா உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்க 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சொல் பேச்சு கேட்ட பாம்பு! திரும்பி போடா என்றதும் சென்றது! வைரல் காணொலி