தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடிதிருத்தம் செய்ய யாரும் வராததால் எலி மருந்து சாப்பிட்ட உரிமையாளர் உயிரிழப்பு - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் முடிதிருத்தம் செய்ய வாடிக்கையாளர்கள் வராத வேதனையில் எலி மருந்து சாப்பிட்ட கடை உரிமையாளர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

thirukattupalli-salon-owner-death-issue
thirukattupalli-salon-owner-death-issue

By

Published : Nov 8, 2020, 8:32 PM IST

திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(37). இவர் திருக்காட்டுப்பள்ளியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு முடிவெட்டிக் கொள்ள ஆட்கள் வராததால் மன உளைச்சலில் இருந்த உரிமையாளர் கண்ணன், அக்டோபர் 28ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்தார். பின்னர் உடனடியாக அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 8) உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கோகிலா, திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த துணை ஆய்வாளர் கார்த்திக் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க:காவல் நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பித்த விவகாரம் - 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details