திருவையாறு அருகே திங்களூர் கிராமத்தில் கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் நவக்கிரக கோயில்களில் ஒன்றான சந்திரன் இருப்பிடமாக உள்ள தலமாகும். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை தரிசித்துச் செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இணங்க சந்திரன் கோயில் மூடப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.