தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு இடமில்லை! - தஞ்சாவூர்
தஞ்சாவூர்: விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசை எதிர்த்து ஆம்பலாபட்டு கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்
அதில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினர். குறிப்பாக விளைநிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதிக்கக் கூடாது. கிராம எல்லைக்குள் மது கடை அமைக்கக் கூடாது என்ற இரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கிராம மக்கள் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொடி ஒன்றை உருவாக்கி ஊர் முழுவதும் ஏற்றி வைத்துள்ளனர்.