தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக்கில் துளையிட்டு மது பாட்டில்கள் திருட்டு - தஞ்சாவூரில் டாஸ்மாக்கில் துளையிட்டு பாட்டில் திருடிய பாய்ஸ்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே உள்ள அரசு மதுபான கடையின் சுவரில் துளையிட்டு 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பதுக்கி வைத்திருந்த பாட்டில்களை மீட்ட காவல் துறையினர்
பதுக்கி வைத்திருந்த பாட்டில்களை மீட்ட காவல் துறையினர்

By

Published : Apr 9, 2020, 10:58 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் பைபாஸ் சாலையின் அருகே அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடை ஒதுக்குப்புறமாக உள்ளதால், ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து மதுபானக் கடை சுவரில் துளையிட்டு உள்ளே இருந்த மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர், டாஸ்மாக் மேலாளர் சென்று பார்த்தபோது , அங்கு இரண்டு லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு மேலாளர் தகவல் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு, ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை செய்ததில் சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன்களான சித்திரை வேல், சக்திவேல் ஆகிய இருவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பதுக்கி வைத்திருந்த பாட்டில்களை மீட்ட காவல் துறையினர்

அவர்களிடம் விசாரணை செய்ததில், மது பாட்டில்களை திருடி வயல் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து வயலுக்குச் சென்ற காவல் துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதையும் படிங்க: மதுபானங்களைத் திருடி விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details