தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது இப்பேராலயம் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் இந்தியாவில் உள்ள பத்து பசிலிக்காவில் ஒன்றாக விளங்குகின்றது.
தற்போது கரோனா பாதிப்பின் காரணமாக 144 தடை உத்தரவின் பேரில் பேராலயம் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலும் ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில் சிறப்பு திருப்பலியை பேராலயத்தில் அதிபர் பாக்கிய சாமி தலைமையில் துணை அதிபர் அல்போன்ஸ் மற்றும் அருட்தந்தையர்கள் நேற்று மேற்கொண்டனர் .