தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பன் திருக்கோயில் தமிழ்நாடு திருப்பதி என்று போற்றப்படும் திருத்தலம். 108 திவ்யதேசங்கள் புகழ்பெற்றதும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்ய பெற்றதுமான இத்திருத்தலம், பூலோக வைகுந்தம் திருவிண்ணகர் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
இத்தளத்தில் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் ஆகிய ஐந்து மூர்த்திகளாக நம்மாழ்வாருக்கு தரிசனம் கொடுத்த வெங்கடாஜலபதி பெருமாள், உப்பிலியப்பன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பூமிதேவி நாச்சியாருடன் ஒரே சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டியதெல்லாம் அருள் பாலிக்கிறார் வெங்கடாஜலபதி.