தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு வந்தது புதிய பாதிப்பு! - Recover environmental extension

தஞ்சாவூர்: காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் எடுப்புக்கான சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் வலியுறுத்தினர்.

thanjavur
thanjavur

By

Published : Sep 16, 2020, 9:43 PM IST

தஞ்சாவூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில், "டெல்டா பகுதியின் விளைநிலங்களில் ஏற்கனவே நிலுவையிலுள்ள ஏழு எண்ணெய் எரிவாயு கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு வரைவுத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஏ பிரிவிலிருந்து, சாதாரண நடைமுறையில் அனுமதி வழங்கக்கூடிய பி பிரிவுக்கு மாற்றப்பட்டு மத்திய சுற்றுச்சுழல் திருத்தம் செய்திருப்பது டெல்டா பகுதிக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சேறும் - தண்ணீரும் கலந்த கலவைகளை மட்டுமே பயன்படுத்தும் முறையை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.

அதிக வெப்பம் கொண்ட ஆழமான பகுதியில் பல அடுக்கு நீரியல் விரிசல் முறையை கொண்டு எண்ணெய் எரிவாயு எடுத்தால் நச்சுத்தன்மை ஏற்பட்டு நிலத்தடி நீரும், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் எடுப்புக்கான சுற்றுச்சூழல் அனுமதி நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்து வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். இது குறித்து தமிழ்நாடு அரசு முறையாகத் தெளிவுப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 35 ஆயிரம் பேர்!

ABOUT THE AUTHOR

...view details