தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா உணவகத்தில் ஆய்வுசெய்த அமைச்சர்...! - வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சாவூர்: மக்கள் பயனடையும் வகையில் குடும்ப அட்டைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய், உணவு பொருள்களின் தொகுப்பை அரசு வழங்கி வருவதாக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகத்தில் ஆய்வுசெய்த அமைச்சர்
அம்மா உணவகத்தில் ஆய்வுசெய்த அமைச்சர்

By

Published : Apr 4, 2020, 2:21 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர் நல அலுவலர் பிரேமா உள்ளிட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் துரைக்கண்ணு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

எந்த கட்சியும் வலியுறுத்தாமலேயே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், சர்க்கரை, அரிசி, பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்பினை நிவாரணமாக தமிழக அரசு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். மக்களின் நலன் கருதியே தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கைது - க.பாண்டியராஜன்

ABOUT THE AUTHOR

...view details