தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அரிசிகாரத்தெரு பகுதியில் வசிக்கும் ஒருவர், தன்னுடைய மனைவியைப் பார்ப்பதற்காக நாகர்கோயில் சென்று இருந்தார். அப்போது அங்கே சுகாதாரத்துறையினர் அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
மனைவியைப் பார்க்கச் சென்றவருக்கு கரோனா தொற்று உறுதி! - Tanjore District News
தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து நாகர்கோவில் சென்றவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தடுப்பு வேலிகள் அமைத்து காணப்படும் பட்டுக்கோட்டை நகர் பகுதி
இதையடுத்து அவருடைய வீடு உள்ள பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அரிசிகாரத் தெரு பகுதியை நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்து, தடுப்பு வேலிகள் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதன்முதலாக பட்டுக்கோட்டை நகர்ப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தனிமைப்படுத்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஓரிரு நாளில் குடிமராமத்து பணி தொடங்கும் - அமைச்சர் காமராஜ்