தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடத்தில், சதயம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
ராஜராஜ சோழனுக்கு கோயில் கட்டுமா தமிழ்நாடு அரசு? - இந்து தமிழர் கட்சி - பொதுமக்கள்
தஞ்சாவூர் : ராஜராஜ சோழனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று, அவரது ஜீவ சமாதியில் நடைபெற்ற சதய விழாவில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
temple
இந்த விழாவில் திருமுறைப்பாராயணம் இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ராம.ரவிக்குமார் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு பெரிய கோயில் ஒன்றைக் கட்ட வேண்டும், சென்னையிலும் உடையாளூரிலும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.