தஞ்சாவூர்:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து டெல்டா பகுதிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் தனது கான்வாய் வாகனம் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சிப்பிரமுகர்கள் உள்ளிட்ட கார்கள் குடைகுழுவுடன் வருகை தந்தார்.
அப்போது பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் காத்திருந்தது. அமைச்சரின் வாகனங்கள் வந்த பிறகு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆற்றுப்பாலத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதான் இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.