முன்னேற்பாடுகள்:
ராஜராஜ சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் பிப். 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தஞ்சை கோயில் கோபுரம் முதல் யாகசாலை வரை முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுவதால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயிலின் வெளிப்புறத் தோற்றம் அதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 275 இடங்களில் தூய குடிநீர் தொட்டிகள், 238 தற்காலிகக் கழிப்பிடங்கள், போக்குவரத்திற்காக நகர் பகுதியில் மட்டும் 250க்கும் மேற்பட்ட இலவச பேருந்துகள், 21 இடங்களில் சிறப்புக் கார் பார்க்கிங் வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய 300க்கும் மேற்பட்ட இரு சக்கர நாற்காலிகள், கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் 13 பட்டிகள், முதலுதவிக்காக 28 ஆம்புலன்ஸ்கள், 21 நடமாடும் மருத்துவ முகாம்கள், இருசக்கர ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோயிலில் முன்னோற்பாடுகள் தீவிரம் தஞ்சாலவூரில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 300 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் துறையினர் பக்தர்களை கவனித்துவருவார்கள். அதற்காக 10 மாவட்டங்களிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
தீவிர கண்காணிப்பில் தஞ்சை பெரிய கோயில் தீயால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக (fire reductions solution) என்ற தீ தடுப்பு தீரம் கலந்து யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 157 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும், எளிதில் தீ பற்றாது. 216 அடி கொண்ட ராஜ கோபுரத்தில் புனித நீர் கொண்டு செல்ல அதிநவீன சூழல் மேஜை ஏணி கொண்ட வாகனம், இது 300 அடி உயரம் வரை செல்லும்.
குடமுழுக்கு பற்றி பெரியகோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளா் பெ.மணியரசன் தமிழ் மற்றும் சமஸ்கிருத குடமுழுக்கு: 11 ஆயிரத்து 900 ஆயிரம் சதுரடியில் பெருவுடையார், பெரியநாயகி, பரிவார தெய்வங்களுக்கு யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 22 வேதிகைகளும், 110 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று எட்டுகால யாகசாலை, விக்னேஸ்வர பூஜை தொடங்கியது.
அதைத்தொடர்ந்து நாளை 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, 80 ஓதுவார்கள் தமிழில் பன்னிரு திருமுறைகள், தேவராம் திருவாசகம் ஓதி யாகசாலை பூஜை நடைபெறும். இந்த யாகசாலை பூஜையில் நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைப் பொருட்கள் பயன்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து புதன் கிழமை அதிகாலை 4:30 மணிக்கு எட்டாம் கால யாகபூஜை நடந்தபட்டு காலை 9 மணி முதல் 10:30 மணிகுள் ராஜ கோபுரம் உட்பட அனைத்து கோபுரத்திலும் புனித நீர் ஊற்றப்படவுள்ளது.
இதையும் படிங்க:தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - ஈடிவி பாரத் நேரலை!