சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (28). இவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக உள்ளார். நேற்றிரவு இவர் கோயம்பேட்டிலிருந்து மன்னார்குடிக்கு அரசு விரைவுப் பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் தன்னை யாரோ தொடுவது போன்று உணர்ந்த தமிழ்ச்செல்வி, கண்விழித்து பார்த்தபோது, பின் இருக்கையில் பேருந்து நடத்துநர் அமர்ந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் நடத்துநரை தாக்கியுள்ளார்.
அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநர் மீது புகார் - conductor complained that he had sexually assaulted
சென்னை: கோயம்பேட்டிலிருந்து அரசுப் பேருந்தில் மன்னார்குடி சென்றபோது நடத்துநர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
![அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநர் மீது புகார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4624688-thumbnail-3x2-cats.jpg)
பாதிக்கப்பட்ட இளம்பெண்
இன்று அதிகாலை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்த அவர் நடத்துநர் ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதேபோன்று ராமநாதபுரத்திலும் ஓடும் பேருந்தில் பெண்களிடம் ராஜு தவறாக நடந்து கொண்டதால், பணியிடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.