தஞ்சாவூர், திட்டை கிராமத்தில் நேற்று பொதுமக்கள் சார்பில் 3,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விழாவை தொடங்கிவைத்தார்.
தஞ்சையில் 3,000 மரக்கன்றுகள் நடும் விழா - தொடங்கிவைத்த ஆட்சியர் - தஞ்சாவூர், திட்டை கிராம், 3,000 மரக்கன்றுகள் நடும் விழா, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை
தஞ்சாவூர்: திட்டை கிராம பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற 3,000 மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய அவர், "இன்றைய காலத்தில் நீரை சேமித்து வைக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம். ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் மரங்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தப்படுத்துதல் போன்ற செயல்களில் தாமாக முன்வந்து ஈடுபடுவது, பிறருக்கு முன்னுதாரணமாக மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கும் மிகப்பெரிய பலனை அளிக்கும்.
நீர் மேலாண்மைக்காக மத்திய அரசு ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏரி, குளம், குட்டை, கால்வாய் போன்றவைகளை தூர்வாரிவருகிறது" எனத் பேசினார்.