தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுப்படுகையை சேர்ந்த கண்ணன் மகன் உதயகுமார் (26). இவர் கட்டடத்திற்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி சீதா என்ற மனைவியும், ரித்திகாஸ்ரீ (3) எனற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (20.07.20) மதியம் உதயகுமார் காவேரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது அப்பா கண்ணன்(47) திருவையாறு காவல்துறைக்கு புகார் அளித்தார். பின்னர் காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்த தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் காவேரி ஆற்றில் இறங்கி தேடினர்