தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அரசு உயர் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்(27) என்பவர், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தியிருக்கிறார்.
இந்த அதிர்ச்சியில் சிறுமி மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் தெளிந்ததும் சிறுமியிடம் இதை யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் என சங்கர் மிரட்டியுள்ளார். அழுதுகொண்டே பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலூக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.