தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நந்தினி கணவர் கலையரசனுடன் அருகே நாதன்கோவிலில் வசித்து வந்தார்.
நந்தினியை கலையரசன் அடிக்கடி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், நந்தினியின் தந்தை ராஜேந்திரனுக்கும் கலையரசனுக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில், கலையரசனை ராஜேந்திரன் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றுவிட்டார்.
மருமகனை கொலை செய்த மானார் ராஜேந்திரன் இது குறித்து தகவலறிந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாமனாரே மருமகனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வேலூரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் - ஏழு பேரை தேடும் பணி தீவிரம்