தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மாணவி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.
இந்நிலையில் ஜனவரி 9ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ஜனவரி 15ஆம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி மாணவி உயிரிழந்தார். மாணவி லாவண்யா மரணத்திற்கு விடுதி காப்பாளர் துன்புறுத்தியதாகவும், வேலை வாங்கியதாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சகாயமேரி என்பவரைக் கைதுசெய்தனர்.
பள்ளி மாணவி உயிரிழப்பு
இந்நிலையில் மாணவி இறந்து ஒரு சில மணி நேரங்களில் தன்னை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
ஆனால், நீதிமன்றம் விசாரிக்காத நிலையில் அமைச்சர்களும், உரிய முறையில் விசாரிக்க வேண்டிய காவல் உயர் அலுவலர்களும், மதமாற்றம் காரணமாக மாணவி மரணம் அடையவில்லை என்ற முன்முடிவுக்கு வந்தது சந்தேகத்தை அதிகரித்தது.