தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - டிஆர்ஒ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்

தஞ்சாவூர்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

thanjavur-rto-office-raid

By

Published : Aug 31, 2019, 7:52 AM IST

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை துவங்கிய இந்த சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சோதனையில் சிக்கிய கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details